

இந்திய எல்லையான அருணாச்சல பிரதேசத்தின் அருகே சீனா ரோடு போடும் வீடியோ வெளியாகி உள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் சீன எல்லையோரம் உள்ள ஹடிகாரா – டெல்டா 6 பகுதியில் சீனப்படைகள் சாலை போடும் பணிகளில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்தியப் பகுதியில் சீனா கட்டுமானப் பணிகள் மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது குறித்து மத்திய அரசு வாய்திறக்க மறுப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
