• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஆட்டுக்குட்டி அண்ணாமலை ஒழிக என கூறியதால் பரபரப்பு,

ByMuthukumar B

Feb 26, 2025

பொள்ளாச்சியில் சட்டத்திட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் ஆட்டுக்குட்டி அழைத்து வந்த கெட் அவுட் மோடி கெட் அவுட் அமித் ஷா என்றும் கோஷம் எழுப்பினர் மேலும் ஆட்டுக்குட்டி அண்ணாமலை ஒழிக என கூறியதால் பரபரப்பு.
தமிழகத்தில் ஆளும் திமுகவினர் ஒன்றிய அரசு கொண்டு வந்த மும்முனைக் கல்வி கொள்கை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்கள் செய்து வருகின்றனர், ரயில் நிலையத்தில் எழுதப்பட்ட போர்டுகளில் ஹிந்தி வாசகங்கள் கருப்பு மையால் அளிக்கப்பட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் சட்டதிட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் கருப்பு மையால் ஹிந்தி வாசகங்களை அழித்தனர் இதை அடுத்து ரயில்வே போலீசார் மூன்று பிரிவுகளில் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் இந்நிலையில் இன்று பொள்ளாச்சி தனியார் பள்ளி சாந்தி நிகேதன் அருகில் சட்டதிட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் கருப்பு ஆடு கொண்டு வந்து கெட் அவுட் மோடி கெட் அவுட் அமித்ஷா என கூறியும் ஆட்டுக்குட்டி அண்ணாமலை என கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை அடுத்து சட்டத்திட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் கூறுகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பேட்டி அளிக்கும் போது ஹிந்தி எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் ரயில் நிலையத்தில் கருப்பு மை கூசி அளித்ததால் திமுகவின் சேர்ந்த ஏ1 குற்றவாளி எனவும் எனது பேரன் எல்லோரும் ஹிந்தி கற்கிறார்கள் எனக்கு கூறியுள்ளார் ஆதலால் எனது பேரன் படிக்கும் பள்ளியில் மார்க் சீட் வாங்கி அண்ணாமல பாரு என ஆட்டுக்குட்டி இடம் காண்பித்து விளக்கம் அளித்துள்ளோம் 1964 இல் பொள்ளாச்சியில் ஏற்பட்ட ஹிந்தி எதிர்ப்பு முக்கிய பங்கு வகிக்கும் எனவும் ஹிந்தி எதிர்ப்பு தெரிவித்து பொம்மை தூக்கிலிட்டோம்.

இது தமிழக முழுவதும் அன்று பரபரப்பு ஏற்படுத்தியது,அதுபோல இன்றும் ஆட்டுக்குட்டி அண்ணாமலைக்கு விளக்கம் அளித்துள்ளோம் அண்ணா சொன்ன வழியில் ஹிந்தியை எதிர்ப்போம் எனவும் ஹிந்தி வேண்டாம் என கூறவில்லை ஹிந்தியைத் திணிக்க வேண்டாம் எனத் தான் கூறுகிறோம் என தெரிவித்தார் திடீரென ஆட்டுக்குட்டி அழைத்து வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது, இதில் நகர துணைத் தலைவர் கௌதமன், கோவை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தென்றல் மணிமாறன், கவுன்சிலர் பிஏ செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.