நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம் தான் தயாரித்த ‘கடைக்குட்டி சிங்கத்தின்’ பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து கிராமத்து பின்னணியில் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘விருமன்’.இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, கருணாஸ், வடிவுக்கரசி, சரண்யா பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ், மனோஜ், ‘மைனா’ நந்தினி, வசுமித்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.இந்த ‘விருமன்’ படம் பற்றி இயக்குநர் முத்தையா கூறியதாவது “விருமன்’ என்பது குல சாமியின் பெயர். ‘விருமன்’னா தேனி பக்கம் ‘பிரம்மன்’ என்று சொல்வாங்க. அதுதான் இந்தப் படத்தின் கதைக் களம். என் எதிர்த்த வீட்டில் நடந்த ஒரு சம்பவம்தான் இந்தப் படத்தின் கதைக் கரு.வாழ்க்கையில் எல்லோரும் தவறுகள் செய்வார்கள். அந்தத் தவறுகளை யாராவது தட்டிக் கேட்கணும். அப்பா, அம்மா, அண்ணன், அக்கான்னு யாரோ ஒருத்தர் அதை சுட்டிக் காட்டணும்.
அது நமக்கு நல்லது செய்யும். நாம் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் அந்த உறவுதான் நல்ல உறவு.இதில் எல்லாமே உறவுகள்தான். இந்த மண்ணோட மனிதர்கள் முன்னாடி எப்படியிருந்தாங்க.. இன்றைக்கும் அப்படித்தான் இருக்கணும்னு சொல்றவன்தான் ‘விருமன்’. அந்த நேர்மையை பேச வருபவன்தான் இந்த ‘விருமன்’. தட்டிக் கேட்கிறவனாக ‘விருமன்’ இருப்பான். உறவுகள் சூழ ஒற்றுமையோடு இருந்து, அவர்களுக்கு ஏதாவது பிரச்சினைன்னா முன்னாடி நிற்கிறவன் ‘விருமன்’தான்.
உறவுகளை மீறி வேறு எதுவும் இங்கே இல்லை. எங்கே போனாலும் இங்கேதான் வந்து சேரணும். ‘விருமன்’ உங்களோட இணைஞ்சு நிற்பான். ‘விருமனைப்’ பார்த்தால் எல்லோருக்கும், அவர்களுக்கு பிடித்தமான இருவரை நினைத்துக் கொள்வார்கள். மறந்துபோன உறவு அவரவர் மனசுல வரும். நியாயங்களை, உறவுகளை எளிதில் காணக் கூடிய மனிதர்களை முன் நிறுத்தி இருக்கேன். அவ்வளவுதான்.
படத்தில் கார்த்திதான் அந்த ‘விருமன்’. சாதுவாகவும்.. முரடனாகவும் எப்படி வேணும்னாலும் கார்த்தி சாரை காட்டலாம். அவர் டைரக்டர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.டைரக்டர் ஷங்கர் சாரோட பொண்ணு அதிதி, ‘தேன்மொழி’ என்கிற கேரக்டர்ல அசத்தியிருக்காங்க. செட்ல, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ்ன்னு பார்த்தாலே பெரிய மரியாதையாக இருக்கும்.‘பந்தல் பாலு’ன்னு கருணாஸ், ‘குத்துக் கல்லு’ன்னு ஒரு கேரக்டரில் சூரி நடித்திருக்கிறார். இவர்களுடன் வசுமித்ர, மனோஜ், ஆர்.கே.சுரேஷ், ’மைனா’ நந்தினின்னு நல்ல கேரக்டர்கள் நிறைய.அம்மாவாக சரண்யா. அவங்களை சுற்றித்தான் கதையே. குணம் கெட்ட மனுஷங்களால் இந்த குலமே அழியுது. அப்படி யாரும் இருந்திடக் கூடாதுன்னு சொல்ல இத்தனை பேரும் முன்னே நிக்க வேண்டியிருக்கு. வடிவுக்கரசி தேனி ஜில்லாவோட பழம்பெரும் கிழவியாக, மிடுக்கா நடை உடை பாவனையில் வாழ்ந்திருக்காங்க நான் எழுதினதைவிட, சொன்னதைவிட நடிச்சுக் காட்டியதைவிட, எதிர்பார்த்ததைவிட படத்தில் நடித்த அனைவரும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். வன்முறை ஏரியாவைக் குறைச்சு, ஃபேமிலி, ஆக்ஷனில் கவனம் செலுத்தியிருக்கேன்…” என்றார் இயக்குநர் முத்தையா.
இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் 60 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. திட்டமிட்ட வகையில் படப்பிடிப்பு முடிந்ததில் படக் குழு உற்சாகமாக உள்ளது.
- மாலை அணிந்து கொடுங்கலூர் சென்ற பக்தர்கள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுக்கு மாலை […]
- ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மஞ்சூரில் ஆர்ப்பாட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் குந்தா வட்டார காங்கிரசின் சார்பில் ராகுல்காந்தி அவர்கள் மீது […]
- குந்தா அணையில் குப்பைகளை அகற்ற முன்னோட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா அணையில் தங்கி உள்ள குப்பைகள் செடி, கொடி இலை அகற்றும் […]
- 2022-2023 ஆம் ஆண்டிற்கான கணிதக் கண்காட்சிநீலகிரி மாவட்டம் மஞ்சூர் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு பெண்கள் உயர்நிலைப் நிலைப் […]
- தேசிய பங்குசந்தை பட்டியலில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்தமிழ் திரையுலகில் அதிக படங்களை தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், […]
- மதுரை அருகே சந்தன கட்டைகள் கடத்திய 2 பேர் கைதுமதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சந்தன மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன இவற்றை கடநத்தி […]
- லைஃப்ஸ்டைல்:புதினா சுருள்சப்பாத்தி: தேவையானவை:கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு […]
- காவிய நாயகி வேடத்தில் சமந்தா..!காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலம் என்ற திரைப்படத்தில் காவிய நாயகி வேடத்தில் சமந்தா நடித்துள்ளார்.தென்னிந்தியாவின் […]
- சூதாட்டத்தை ஆடிவிட்டு அதற்கு ஆதரவாக நடிகர்கள் விளம்பரம் செய்யவேண்டும்-விக்கிரமராஜா பேட்டிஆன்லைன் சூதாட்டத்தை கவர்னர் தடை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆன்லைன் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒட்டு […]
- ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதுராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது எம்.பி பதவியை பறித்து […]
- முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கியமதுரை 70 வது […]
- ஏப்ரல் மாதம் வெளியாகும் ” ரஜினி ” படம்வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் […]
- N4 திரை விமர்சனம்சென்னை காசிமேடு பின்னணியில் உருவாகியுள்ள படம். அங்குள்ள காவல்நிலையத்தின் எண், என்4 என்பதால் படத்துக்கு இந்தப்பெயர். […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்;இறுதியில் நம்மை கோமாளி ஆகிவிட்டு அவர்கள் ஒன்றாக […]
- இன்று நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த தினம்X-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த […]