• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அனைத்து குற்றச்சாட்டுகளிலும் உண்மையில்லை..,

ByE.Sathyamurthy

Jun 20, 2025

தருமபுரி மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது பென்னாகரம் இடைத்தேர்தலில் அரசியல் கற்றுக் கொண்டேன் தருமபுரி மாவட்டத்திற்கு கடைசி வரை நன்றி கடன் பெற்றவன் நான் தர்மபுரி எம்பி ஆக இருந்தபோது வாரம் இரண்டு நாட்கள் உயிரை கைகளில் பிடித்துக் கொண்டு தர்மபுரிக்கு வருவேன்.

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் தான் சென்றுள்ளதை நினைவுகூர்ந்தார். பாமகவில் தலைவர் பொறுப்பை ஏற்றதில் இருந்து மன நிம்மதி போய்விட்டது. தன் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளும் 100% பொய்யானது. மருத்துவர் ஐயா 45 வருடமாக உழைத்து இந்த கட்சியை கொண்டு வந்தார். பாமக சிறந்த கட்சி இந்தியாவில் இந்திய அளவில் பல சாதனைகளை செய்த கட்சி இட ஒதுக்கீடு சாதி மாறி கணக்கெடுப்பு நடத்த கோரி ஆட்சியாளர்களை கேட்டோம்.

ஆனால் அவர்கள் மத்திய அரசின் மீது பழியை போட்டு நடத்தாமல் உள்ளனர். ஊழல் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். வன்னியர்களுக்கு துரோகம் செய்த கட்சி திமுகவை வன்னிய மக்கள் புறக்கணிக்க வேண்டும் ஒரு ஓட்டு கூட போடக்கூடாது. திமுக தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாது. வரும் ஜூலை 25ஆம் தேதி திருப்போரூர் முருகனை வழிபட்டு திமுக ஆட்சியை அகற்ற கோரி தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம் என்ற நடை பயணத்தை துவக்க உள்ளதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ உள்ளிட்ட அனைத்து நிலை கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.