வரும் ஜூலை 11 ம்தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என ஓபிஎஸ் தரப்பு தகவல்
அதிமுக பொதுக்குழு ஏற்கனவே கடந்த ஜூன் 23ம் தேதி கூடியது. ஓபிஎஸ்.இபிஎஸ் இருதரப்பு மோதல் காரணமாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் முடிந்து போனது. மேலும் அதை தொடர்ந்து ஜூலை 11 ம் தேதி பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என ஓபிஎஸ் தரப்பு சொல்கிறது.
இந்நிலையில் இபிஎஸ் தரப்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர். உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகளை செய்தாலும் பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்று ஓபிஎஸ் தரப்பு அடித்து கூறுகிறது. இது குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் ஆர்.வைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சர்வாதிகாரி மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றனர். பொருளாளருக்குத்தான் கட்சியை வழிநடத்தும் அதிகாரம் உள்ளது. பொருளாளர் ஓபிஎஸ் ஒப்புதலின்றி பொதுக்குழு கூட்டினால் அது செல்லாது என்று தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை
