• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருவிழாவில் தேனிசை தென்றல் தேவா இசை நிகழ்ச்சி..,

ByM.I.MOHAMMED FAROOK

Jan 18, 2026

காரைக்கால் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு புதுவை சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் இணைந்து மூன்று நாட்கள் கார்னிவல் திருவிழா நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இந்த கார்னிவல் திருவிழாவின் இரண்டாவது நாளாக இன்று தேனிசை தென்றல் தேவா மற்றும் அவரது குழுவினர் பாடல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேவா மற்றும் ஸ்ரீகாந்த் தேவா உடன் அனுராதா ஸ்ரீ ராம், பிரியங்கா, அஜய் கிருஷ்ணா ஆகியோரின் பாடல் கச்சேரி விமர்சையாக நடைபெற்றது. அப்பொழுது தேனிசை தென்றல் தேவா கவலைப்படாத சகோதரா என்று பாடல் பாடியுடன் ஒட்டுமொத்த கூட்டமும் வைபாகி உற்சாகமடைந்தனர்.‌

மேலும் தேனிசை தென்றல் தேவா அவர்களின் இசை நிகழ்ச்சியை காண்பதற்காக காரைக்கால் ஒட்டி உள்ள நாகப்பட்டினம், மயிலாடுதுறை திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். மேலும் தேவா அவரது குழுவினர் பல்வேறு பிரபல இசைகளை பாடி சுற்றுலாப் பயணிகளை மகிழ வைத்தார்கள். கார்னிவல் திருவிழா இசை நிகழ்ச்சியை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.