தேனி மாவட்டம், வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாகப் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா வருடம் தோறும் சித்திரை மாதத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 7 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான முதல் நாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதன்படி வண்ண பட்டுடுத்தி மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மன் திருத்தேரில் அமர்ந்து காட்சி தந்ததைத் தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஏராளமான மக்கள் கூடி இருக்க தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா மற்றும் ஏராளமான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தத் தேரோட்டத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை சாமி தரிசனம் செய்தனர்.