தேனி மாவட்டம் போடி தாலுகா கோடாங்கிபட்டி அருகே உள்ள ஒத்த வீடு பகுதியில் போடி -தேனி சாலையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சோதனை சாவடி கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து இடங்களுக்கு மேல், கஞ்சா, கணேஷ் புகையிலை. கூலிப் ,சில்லறை மது விற்பனை தொடர்ந்து 24 மணி நேரமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனை தடுக்க கட்டப்பட்டுள்ள தேனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சோதனைச் சாவடி நீண்ட நாட்களாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளதால் கஞ்சா, கணேஷ் கோயிலை, மது விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவே உடனடியாக பூட்டியே கிடக்கும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சோதனை சாவடியை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.