• Thu. Apr 18th, 2024

தேனி: முகூர்த்தக் கால்
நடுதல்: கோயில் விழா

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சி அம்மன் கோயிலில் பிப்., 8ல், முகூர்த்தக் கால் நடப்பட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் பிரசித்து பெற்ற மூங்கிலனை காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். குலதெய்வம் அல்லாதோருக்கும், இது குலதெய்வமாக விளங்கி வருகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாவின்போது, பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பிற மாவட்டங்களில் இருந்து கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பக்தர்கள் வெள்ளத்தில் தேவதானப்பட்டி திக்கு… முக்காடி…காணப்படும். கொரோனா தொற்று பரவலால், பல திருவிழாக்கள் ‘சத்தமில்லாமல்’ கோயில் நிர்வாகம் நடத்தி வருகிறது. இதனால், பக்தர்களின் வருகை குறைவால் கோயில் வளாகம் முழுவதும் ‘வெறிச்’ சோடி காணப்படுகிறது. இச்சூழ்நிலையில், கடந்த பிப்.,8 ல், மகா சிவ ராத்திரி விழாவை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் மேளதாளங்கள், முழங்க
முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் குறைவான பக்தர்களே வருகை புரிந்தனர்.
கோயில் நிர்வாக அதிகாரி வைரவன் கூறுகையில்,”சமீபத்தில் தான் இக்கோயிலுக்கு ‘டிரான்சராகி’ வந்தேன். இதற்கு முன்னதாக, புதுக்கோட்டையில் பணியாற்றினேன். இக்கோயிலில், மார்ச் 1ல், நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, கடந்த 8ல், முகூர்த்த கால் நடப்பட்டது. கொரோனா தொற்று பரவல் குறைந்தாலும், அன்றைய தினம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். பக்தர்கள் பாதுகாப்பு கருதி கோயில் நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *