• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேனி: ரயில் நிலையத்தில் எம்.பி., ரவீந்திரநாத் ஆய்வு

தேனி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் இறுதிகட்ட பணிகளை எம்.பி., ரவீந்திரநாத் தலைமையில் ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.

மதுரை- போடி வரையிலான ரயில்வே திட்டப் பணிகளில் நிறைவடைந்த மதுரை – தேனி வரையிலான பகுதிகள் ரயில்வே பாதுகாப்பு குழுவினரால் வரும் 31ம் தேதி ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று (ஜன.26) மாலை 4 மணியளவில் தேனி எம்.பி., ப. ரவீந்தரநாத் தேனி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் இறுதிகட்ட பணிகளையும், மின் தொடரமைப்பு கழகத்தின் உயர்மின் கோபுர வழித்தட மாற்றுப் பணியினையும் ஆய்வு செய்தார்.

பின்னர் ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள ‘சிக்னல் மேனேஜ்மென்ட் மானிட்டரையும்’ பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது எம்.பி., ரவீந்திரநாத்திற்கு, தேனி வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனம் சிதம்பரம் புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் சந்திப்பின் போது,” வரும் 31ம் தேதி ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரை விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. பின்னர் ரயில்வே பணிகளுக்கு இடையூறாக இருக்கும் உயர்மின் கோபுரம் மாற்றி அமைப்பது உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்த உடன் பயணிகள் ரயில் இயக்கப்படும்” என்றார்.

ஆய்வின் போது ரயில்வே கூடுதல் நிர்வாக பொறியாளர் சரவணன், முதன்மை மின் பொறியாளர் ராஜன் மற்றும் மின் தொடரமைப்பு கழக உதவி இயக்குனர் வெங்கடேஷ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.