• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேனி மருத்துவக்கல்லூரியில்
மின்சாரம் தாக்கி எலக்ரீசீயன்
காயம்.


தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் எலக்ரீசீயனாக வேலை செய்து வருபவர் நேற்று டிரான்பார்மில் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா பள்ளபட்டி பகுதியை சேர்ந்த ஆண்டிச்சாமி என்பவரின் மகன் கண்ணன்(40). இவர் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவமனை கட்டிட பிரிவு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கடந்த 15 வருடங்களாக தற்காலிக எலக்ரீசீயனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் நேற்று பரவலாக காற்றும், சாரல் மழையும் அடிக்கடி பெய்து வந்தது. இதனால் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள டிரான்பார்மில் ஊராய்வு ஏற்பட்டு மின் துண்டிப்பு ஏற்பட்டது. இதனை சரிசெய்வதற்காக கண்ணன் டிரான்பார்மில் ஏறி பழுது நீக்கி வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட மின்கசிவால் கண்ணன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டது. தூக்கி வீசப்பட்டதில் கண்ணனுக்கு தலை மற்றும் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. மேலும் தீக்காயத்துடன் இருந்த கண்ணனை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எலக்ட்ரீசீயன் மின்சாரம் பாய்ந்து காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.