• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தேனி: மாவட்ட கால்பந்து
கழக லீக் சாம்பியன்ஷிப்
போட்டிகள்

தேனி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியம் மொட்டனூத்து ஊராட்சிக்குட்பட்ட ஆசாரிபட்டி கிராமத்தில் உள்ள மைதானத்தில் போட்டிகள் துவங்கியது. இப்போட்டியில் தேனி, போடி, சின்னமனூர், வெங்கடாச்சலபுரம், ஆதிப் பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 18 அணிகள் பங்கேற்றன. மார்ச் மாதம் வரை நடைபெறும், இப்போட்டிகள் இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. முதல் தரப்போட்டியில் 8 அணிகளும், இரண்டாம் தரப்போட்டியில் 10 அணிகளும் விளையாடி வருகின்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை, கோப்பை வழங்கப்படவுள்ளன. இரண்டாம் தர போட்டியில் முதல், இரண்டாமிடம் பிடிக்கும் அணிகளுக்கு அடுத்தாண்டு நடைபெறும் லீக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும். மாவட்ட கால்பந்து கழக தலைவர் கதிரேசன் போட்டிகளை நடத்தி வருகிறார்.