• Wed. May 13th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

நிரம்பி வழிகிறது தேனி மாவட்ட அணைகள்

தேனி மாவட்டம் அனைத்து அணைகளும் நிரம்பியது. வைகை அணையிலிருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 232 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகாநதி அணை, வைகை அணை உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மூலைகையாறு, கொட்டக் குடி ஆறு,முல்லைப்பெரியாறில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் கடந்த 16 நாட்களுக்கு முன்பாகவே நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

நேற்று அதிகபட்சமாக அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி கீழ் மதகு மற்றும் மேல் மதகுகள் வழியாக அணையிலிருந்து 7232 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அந்தந்த மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் எச்சரித்துள்ளது .

மழை எதிரொலியாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளார். நேற்று அதிகபட்சமாக தேனி மாவட்டம் வீரபாண்டி 7 8.6 மில்லி மீட்டரும், உத்தமபாளையத்தில் 50 மில்லி மீட்டரும், கூடலூரில் 52 மில்லி மீட்டரும், ஆண்டிபட்டியில் 44 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.