• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

விழா பணிகள் குறித்து தேனி கலெக்டர் நேரில் ஆய்வு..,

தேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா 12.05.2025 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று தமிழக-கேரள மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் 12.05.2025 அன்று திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்திட ஏதுவாக போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, குடிநீர், தற்காலிக பந்தல்கள், தற்காலிக கழிப்பிட வசதி, பாதைகள் செப்பனிடுதல், முதலுதவி வாகனத்தை தயார் நிலையில் நிறுத்தி வைப்பது, வன விலங்குகளால் பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வண்ணம் தடுப்பு வேலிகளை அமைப்பது, மருத்துவ முகாம்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வில் உதவி வன பாதுகாவலர் அரவிந்த், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது, துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், வட்டாட்சியர் கண்ணன், கூடலூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழாவை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது உதவி வன பாதுகாவலர் அரவிந்த், உத்தமபாளையம் RDO செய்யது முகமது, DSP வெங்கடேசன், தாசில்தார் கண்ணன், கூடலூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.