• Sun. Feb 9th, 2025

தேனியில் தூய்மை பணியாளர்கள் ஆலோசனை கூட்டம்!…

By

Aug 19, 2021

தேனி மாவட்ட அனைத்து தூய்மை பணி தொழிலாளர் சங்கம் சார்பில் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் பாண்டி, சிபிஐ உத்தமபாளையம் பொறுப்பாளர் நாகராஜன் தலைமையில் அனைத்து தூய்மை பணி தொழிலாளர் சங்கம் சார்பில் கிளை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த ஊதிய உயர்வை உடனடியாக வழங்கவும், பெண் தொழிலாளர்களை லாரி வேலைக்கு அனுப்புவதை கண்டித்து ம், ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை சம்பந்தமாகவும்,
தொழிலாளர்களை இடம் விட்டு இடம் மாற்றுப் பணிக்கு அனுப்புவது தொடர்பாகவும் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.