• Sat. Apr 1st, 2023

மதுரையில் பா.ஜ.க சார்பில் சுகாதார தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்..!

By

Aug 19, 2021

மதுரை மாவட்டம், மதுரையில் கொரோனா மூன்றாவது அளவில் அந்த எதிர்கொண்டு பொது மக்களுக்கு உதவும் வகையில் சுகாதாரத் தன்னார்வலர்களுக்கு மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில், இந்த முகாமில் மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சீனிவாசன் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்எல்ஏ மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர் சரவணன் மற்றும் மாநில தலைவர் விஜய பாண்டியன் கலந்துகொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துப் பேசியதாவது..,


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 1வது அலை மற்றும் 2வது அலையைக் கடந்துவிட்டோம். எனவே கொரோனா 3வது அலை வந்தால் அதற்காக பொது மக்களுக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி மாநகர் மாவட்டம் கிராமங்கள் தோறும் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு மற்றும் தனிமனித இடைவெளி அவசியம் முக கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி எவ்வாறு செலுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதேபோல் முக்கிய திட்டங்களை எடுத்துக்கொண்டு மக்களிடையே நேரடியாகச் சென்று கொரோனாவை எதிர்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த பயிற்சி முகாமில் பாரதிய ஜனதா கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *