கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பனவிளையைச் சேர்ந்தவர் ராஜன், இவர் குளச்சல் வி.கே.பி.பள்ளிக்கூடம் அருகே இருசக்கர வாகனங்களின் பழுது நீக்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ஒர்க் ஷாப்பில் நேற்று காருடன் வந்த டிப் டாப் ஆசாமி ஒருவர் கார் டயர் டிஸ்க்கை சரி செய்துள்ளார். அதற்கு கூலி கேட்ட நிலையில் அந்த டிப் டாப் ஆசாமி, தான் குளச்சல் டி.எஸ்.பி.அலுவலகத்தில் குற்றப்பிரிவு எஸ்.ஐ ஆக பணி புரிவதாகவும் ‘என்னிடமே பணம் கேட்கிறாயா?’ என மிரட்டி உள்ளார்.
அந்த ஆசாமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ராஜன், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். குளச்சல் போலீசார் நடத்திய விசாரணையில், டிப்-டாப் ஆசாமி மண்டைக்காடு அருகே காட்டுவிளையை சேர்ந்த சேகர் என்பதும், இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காவல் துறையில் ஒயர்லெஸ் பிரிவில் ஏட்டாக வேலை பார்த்ததும் தெரியவந்தது.
முன்னாள் காவலரிடம் இருந்து போலியாக வைத்திருந்த காவல் துறை அடையாள அட்டை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அடையாள அட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர்.