வாதியானவர் கடந்த 16.08.24ம் தேதி மாலை சுமார் 5 மணிக்கு, அவரது வீட்டையும், பீரோ லாக்கரையும் பூட்டிவிட்டு, பீரோ லாக்கர் சாவியை மட்டும் வாதி வைத்துக் கொண்டு, வீட்டுச் சாவியை பக்கத்தில் உள்ள அவரது உறவினரான சத்தியமூர்த்தி மனைவி குமாரி என்பவரிடம் கொடுத்துவிட்டு, திண்டுக்கல்லில் பி.எஸ்.என்.ஏ.காலேஸில் படித்து வரும் அவரது மகள் பாதுகாப்பிற்காக திண்டுக்கல்லில் வாடகை வீடு தங்கியுள்ளதால், திண்டுக்கல் சென்று விட்டதாகவும், திரும்ப 13.01.25ம் தேதி இரவு 8 மணியைப் போல திருவில்லிபுத்தூர் துடியாண்டியம்மன் கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து, அவரது உறவினரான குமாரி என்பவரிடம் வீட்டுச் சாவியை வாங்கி, வீட்டைத் திறந்து, அவர் கொண்டு வந்த பணத்தை பீரோவில் வைப்பதற்காக பீரோவைத் திறந்தபோது, பீரோவின் லாக்கரில் உள்ள பூட்டு நெம்பப்பட்டு, பூட்டிய நிலையில் இருந்தது என்றும், பீரோ லாக்கரைத் திறந்து பார்த்தபோது, வாதி பீரோவின் லாக்கரில் மணிப்பர்சில் வைத்திருந்த மேற்படி தங்க நகைகள் காணாமல் போனது அதிர்ச்சியடைந்ததாகவும், இது சம்மந்தமாக கயத்தாறில் தங்கி வேலை பார்த்து வரும் அவரது கணவருக்கு போன் செய்து தகவல் சொன்னதாகவும், அவரது கணவர் மறுநாள் காலை வந்து, இருவரும் சேர்ந்து பீரோ மற்றும் அக்கம், பக்கம் இடங்களில் உள்ளவர்களிடம் ஒரு வாரமாக விசாரித்தும், தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், மேலும் அவரது தெருவில் இருந்து வரும் சிவக்குமார் மகன் ஜோதிமணிகண்டன் என்பவர் மீது சந்தேகம் இருந்து வருவதாகவும், எனவே மேற்படி விசாரித்தும், திருடு போன தங்க நகைகளையும், திருடிய நபரையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டி 21.01.25ம் தேதி காலை 6 மணிக்கு வாதி காவல்நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர்
1) ஜோதிமணிகண்டன் (28)
த.பெ சிவக்குமார்
துடியாண்டி அம்மன் கோவில் தெரு, திருவில்லிபுத்தூர்,
2) ரஞ்சித்குமார் (32)
த.பெ மனோகரன்
பசும்பொன் நகர்
மம்சாபுரம், திருவில்லிபுத்தூர்.
3) கோபிநாத் (33)
த/பெ சண்முகவேல்
இந்திரா நகர்.
மம்சாபுரம், திருவில்லிபுத்தூர். ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்