
இந்தியா முழுமையாக அந்த நாளில் நரேந்திர மோடி “டீ”விற்பனை செய்த இரயில் நிலையங்கள் உட்பட 508_ இரயில் நிலையங்களில் புதிய, புதுப்பிக்கும் பணிகளுக்கு இரயில்வே துறை ரூ.6000.00 கோடி ஒதுக்கீட்டில், குமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு இரயில் நிலையம் புனர் அமைப்பு பணிக்காக ரூ.11_கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமாக (நாகர்கோவில் சந்திப்பு இரயில் நிலையம்) உட்பட18 இரயில் நிலையங்கள் ரூ. 240_கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதின் பணிகளை டெல்லியில் இரயில்வே துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற விழாவில் இன்று காலை (ஆகஸ்ட்_6)காலை 11.30 மணி அளவில் டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவிலில் சந்திப்பு இரயில் நிலையத்தில் டெல்லியில் பிரதமர் பங்கேற்று 508 இரயில் நிலையம் பணிகள் துவக்கத்தில் ஒன்றான நாகர்கோவில் சந்திப்பு இரயில் நிலையத்தில் நடை பெற்ற விழாவில், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் (பாஜக)எம்.ஆர்.காந்தி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் (திமுக) திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் ஆகியோர் பங்கேற்ற விழாவின் தொடக்கமாக பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாகர்கோவில் விழாவில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேசிய போது.
நாகர்கோவில் டவுன் இரயில் நிலையத்தையும் இந்த திட்டத்தின் போதே சீர் செய்ய நிதி ஒதுக்கி இருந்தால் குமரி மாவட்ட மக்கள் அனைவருமே மிக மகிழ்ந்திருப்போம்.
எனது நீண்ட நாள் கோரிக்கையான நாகர்கோவில்_வேளங்கண்ணி இரயிலை மத்திய இரயில்வே துறை அண்மையில் அனுமதித்ததில் இந்த மாவட்ட மக்களோடு ஒன்றித்து நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஏற்கனவே இயக்கத்தில் இருந்து, தற்போது இயக்கப்படாமல் இருக்கும் சார்மினார் எக்ஸ்பிரஸ் (ஹைதராபாத்_கன்னியாகுமரி) விரைவில் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
விழாவில் பேசிய நாகர்கோவில் மேயர் மகேஷ், நாகர்கோவில்_தாம்பரம் இரயில் வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்குவதை, தினசரி இயக்க வேண்டும்.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியை சுகாதாரத்தோடு, சுத்தமாக நாங்கள் பராமரிப்பு செய்யும் நிலையில்,
கோட்டார்_ கூளக்கரை பகுதி இரயில்வே துறைக்கு சொந்தமான குடியிருப்புகளும்,சில அலுவலகங்களும் உள்ள இடத்தை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள், மற்றும் ஜெசிபி-யை இரயில்வே துறை அதிகாரிகள் மாநகராட்சி ஊழியர்களை அங்கு சுத்தம் செய்ய அனுமதி மறுக்கிறார்கள். இது குறித்து கோட்ட அதிகாரி விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
முன்னாள் நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய இணை அமைச்சருமான இராதாகிருஷ்ணன் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து விழாவில் பங்கேற்றார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி பேச்சின் போது இரு முறை பிரதமர் மோடி யின் பெயரை உச்சரித்த போது. அங்கு கூடியிருந்த பாஜக கட்சியினர் தொடர்ந்து கோசம் எழுப்பியது. நடப்பது அரசு நிகழ்ச்சியா? அல்லது பாஜக நிகழ்வா? என்ற கருத்தை விழாவில் பங்கேற்ற மாற்ற கட்சியினர் ஒரு குறையாக தெரிவித்தனர்.
ஒன்றிய அரசின் விழா என்ற நிலையில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் அனைவரும் மத்திய பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே பங்கேற்க செய்தது. ஒன்றிய இரயில்வே துறை அமைச்சகத்தின் அணுகுமுறையால் குமரியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களை முற்றாக திருவனந்தபுரம் கோட்டம் தலைமை புறக்கணித்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் இந்திய மரபு கேள்வி குறி ஆக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார். நாகர்கோவில் பெரு நகர காங்கிரஸ் கட்சி தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினருமான நவீன் குற்றம் சாட்டினார்.
