• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

50 கிலோ இளவட்டக்கல்லை அசால்டாக தூக்கி அசத்திய பெண்..!

Byவிஷா

Jan 11, 2024

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் 50 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லை பெண் ஒருவர் அசால்டாக தூக்கிய அசத்தியுள்ளார்.
ஒரு காலத்தில் இளவட்டக்கல் என்பது ஒவ்வொரு ஊருக்கும் பிரதானமாக இருந்தது. பெண்ணுக்கு வரன் பார்க்கும் பெற்றோர், வரப்போகிற மருமகனின் உடல்நலன் குறித்தும், உடல் திறன் குறித்தும் சோதிக்க இளவட்டக்கல்லைத் தூக்க சொல்வார்கள். பெற்றோர்கள் விட்டாலும், ஊரார், தங்கள் ஊருக்கு மருமகனாகப் போகிறவரின் உடல்திறனை இப்படி சோதிப்பது வழக்கம்.
பொங்கல் பண்டிகையையொட்டி, பாரம்பரிய திருவிழாக்களும், போட்டிகளும் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளனர். உறியடி, ஜல்லிக்கட்டு போன்று இளவட்டக்கலைத் தூக்கும் போட்டிகளும் பல ஊர்களில் நடைப்பெற்று வருகிறது. அப்படி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடத்தப்பட்ட இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் கவிஞர் மற்றும் மேடைப்பேச்சாளர் ஆயிஷா இளவட்டக்கல்லை தூக்கி வெற்றி பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
தென் மாவட்டங்களின் பல்வேறு கிராமப்புறங்களிலும் இன்றளவும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது. ஆண், பெண் என இருதரப்பினருக்கும் இந்த போட்டியானது நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கம் மற்றும் பொருட்கள் பரிசாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் கவிஞர் மற்றும் மேடைப்பேச்சாளர் ஆயிஷா இளவட்டக்கல்லை தூக்கி வெற்றி பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே போன்று நெல்லை மாவட்டத்திலும் இளவட்டக்கல்லைத் தூக்கும் போட்டி நடைபெற உள்ள நிலையில், பெண்கள் அசால்டாக 50 கிலோ, 60 கிலோ எடை கொண்ட இளவட்டக்கல்லைத் தூக்கி வீசி, பயிற்சி பெற்றனர். இந்த வீடியோக்களும் வெளியாகி, வைரலாகி வருகின்றன.