ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் பலர், தங்களது அவசர பணத் தேவைகளுக்கு, கந்துவட்டி கும்பல்களிடம் பணம் வாங்கி , அவர்களிடம் சிக்கி, மீள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் இதுபோல் நிகழ்ந்த அவலங்கள் ஏராளம். இதனை முற்றிலும் ஒழித்துக்கட்ட, தமிழக அரசு கந்து வட்டி தடைச் சட்டம் கொண்டு வந்தது. ஆனாலும் கந்து வட்டிக் கும்பல்கள், வெளியில் தெரியாமல் ரகசியமாக இயங்கி கொண்டுதான் இருக்கின்றன.
அப்படி ஒரு, கந்துவட்டி கொடுமைதான் கோவில்பட்டியில் அரங்கேறியுள்ளது. கந்து வட்டி நெருக்கடி தாங்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு கோவில்பட்டியில் வருவாய் கோட்டாட்சியர் காலில் விழுந்து பெண் கண்ணீர் மல்க அழுத காட்சி காண்போரை நிலைகுலைய செய்தது.