• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கணவனை ஏலம் விட்ட பெண்!

ஒவ்வொரு வீட்டிலும் கணவன், மனைவி இடையே சண்டை வரவது இயல்பு தான். வாய் வார்த்தை தாண்டி, சில சமயங்களில் கைகலப்பு கூட நடைபெறும். பாத்திரங்கள், பூரி கட்டைகள் எல்லாம் பறக்கும்.

என்னதான் அடிக்கடி சண்டை வந்தாலும், இறுதியாக யாராவது ஒருவர் சமாதானம் அடைந்து வழக்கமான வாழ்க்கைக்கு திரும்பிவிடுவர்.

ஆனால், ஒருசில இடத்தில் லேசான சண்டை ஏற்பட்டாலும் எந்த வகையிலும் தீர்வு கிடைக்காதது. அங்கு தான் பிரிவு ஏற்படும்.

இதையும் தாண்டி அயர்லாந்து நாட்டில் நடந்த ஒரு சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரேட் மீ என்ற இணையதளத்தில் அண்மையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அயர்லாந்தை சேர்ந்த லிண்டா மலிஸ்டர் என்ற பெண், தனது கணவர் ஜான் மலிஸ்டர் ஏலத்தில் விற்பனைக்கு என இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டிருந்தார். அந்த விளம்பரத்தில், ஜானுக்கு 37 வயது ஆகிறது.

இவர் 6.1 அடி உயரம் கொண்டவர். இவர் மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இதற்கு முன்பு இவருக்கு ஏராளமான உரிமையாளர்கள் உண்டு.

அவருக்கு முறையாக இரை வைத்து, தண்ணி காட்டினால் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார். ஆனால், இன்னும் சில வீட்டு பயிற்சி இவருக்கு தேவைப்படுகிறது. ஆனால், எனக்கு அதற்கான பொறுமையோ, நேரமோ கிடையாது.

இந்த விற்பனை இறுதியானது. ரிட்டன் அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளப்பட மாட்டாது, என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த விஷயம் தனது நண்பர்கள் மூலமாக ஜானுக்கு தெரியவந்தது. ஆனால் இதையெல்லாம் கேட்டு சிரிப்பதை தவிர வேறு வழியில்லை என்றார் அவர்.

ஏனெனில் அவர் இதற்கும் மேல் நடக்கும் என எண்ணியிருந்தார். ஏல விளம்பரம் வெளியான ஒரு மணி நேரத்தில் 12 பேர் அதற்கு ஏலம் கேட்டிருந்தனர்.

ரூ.5 ஆயிரம் வரை விலை கேட்கப்பட்டது. இதற்கிடையே, வர்த்தக விதிகள் மீறப்பட்டதாகக் கூறி, டிரேட் மீ இணையதளம் அந்த விளம்பரத்தை நீக்கியது.