• Sun. Mar 16th, 2025

மொபைலில் போனில் பேசியபடியே பலியானவர்கள்…மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

ByA.Tamilselvan

Jan 2, 2023

மொபைல் போனில் பேசியபடி சென்று சாலை விபத்து.ஏற்பட்டு1,040 பேர் பலி என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு சாலை விபத்துக்கள் என பெயரிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2021ம் ஆண்டு விபத்துக்களில் பலியானவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2021-ம் ஆண்டில் மொபைல் போன் பயன்படுத்தியபடி வாகனத்தில் சென்று ஓட்டுனர்கள் 1,997 சாலை விபத்துகளை ஏற்படுத்தி உள்ளனர். அவர்களால் 1,040 பேர் உயிரிழந்து உள்ளனர் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்தியாவில் சாலை விபத்துகள் என்ற பெயரிடப்பட்ட அந்த அறிக்கையின்படி, 2021-ம் ஆண்டில் சிவப்பு நிற விளக்கு எரியும்போது, கடந்து சென்று சாலை விபத்து ஏற்படுத்திய எண்ணிக்கை 555 என்றும், அதில் 222 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சரியாக செப்பனிடப்படாமல் குண்டும், குழியும் ஆக காணப்படும் சாலைகளால் ஏற்பட்ட விபத்துகள் 3,625 என்றும் அதில் 1,481 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.