கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் மணல் அள்ளுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் மணிவாசகம் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் உயிரிழந்த மணிவாசகத்தின் மனைவி நந்தினி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கினார்:
மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
எம் ஏ பி எட் வரை படித்துள்ளேன் எனக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும் மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. என் கணவர் மணிவாசகம் விவசாய வேலை செய்து வந்தார். எங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் மணல் வெங்கடேசன் என்பவர் மணல் அழுவதை தடுத்த எனது கணவரை கடந்த 13.07.25 அன்று வெங்கடேசன் மற்றும் அவரது என் நண்பர்கள் திட்டமிட்டு கொலை செய்தனர். எனது கணவரோடு சேர்ந்து ஐந்து நபர்களை வெட்டியுள்ளனர். அது தொடர்பாக வாங்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் வெங்கடேசன் என்பவர் ஒரு குற்றப் பின்னணி கொண்டவர் மற்றும் அரசியல் பலம் மிக்கவர். அவரை சார்ந்தவர்கள் நாங்கள் இருக்கும் ஊருக்குள் வெங்கடேசன் 55 நாட்களில் வெளியே வந்து விடுவான் என்றும் எங்கள் குடும்பத்திற்கு கஷ்டம் வரும் என்றும் சொல்லி வருகின்றனர். பின்னணியில் உடையவர்கள் என்பதால் இவ்வழக்கு விசாரணையின் ஆரம்ப கட்டத்திலேயே வெளியே வந்தால் எனது உயிருக்கும் எனது குழந்தைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாகவும்,
எனது கணவரின் தம்பி மகேஸ்வரன் என்பவருக்கும் பலமாக காயம் ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ளார் தற்போது எங்கள் குடும்பத்தில் ஆண்கள் யாரும் பாதுகாப்பிற்கு இல்லாததால் மேற்படி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வெங்கடேசன் என்பவர் பிணையில் வெளியே வந்தால் பொதுமக்களுக்கும் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்காது எனவே எனது குடும்பத்தினரின் உயிருக்கு பாதுகாப்பு அளித்தும் மேற்படி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் வெங்கடேசன் என்பவர் மீது குண்டாஸ் சட்டப்பிரிவுகளில் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளது.

மற்றொரு மனுவில்: வீட்டில் எனது கணவர் மட்டும் வேலைக்கு சென்று சம்பாதித்து வந்தார் தற்போது எனது குடும்ப செலவு மற்றும் குழந்தைகளின் படிப்பு மற்றும் எனது மாமனாரின் மருத்துவ செலவுகளையும் பார்த்து வருகிறேன் இந்த நிலையில் எனது கணவரின் திட்டமிட்டு கொலை எனது குடும்பத்தை மனரீதியாகவும், பண ரீதியாகவும் அதிகளவு பாதித்துள்ளது. எனவே எம்.ஏ பி. எட் படித்த பட்டதாரி என்பதால் எனக்கு அதற்குரிய அரசாங்க வேலைக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டார்.