• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

நிலை தடுமாறிய வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்து

நீலகிரி மாவட்டம் உதகை மஞ்சூர் முக்கிய சாலையில் ஆறாவது மைல் அதிகரட்டி பகுதியில் தனது வாகனத்தை சாலையோரம் நிறுத்தி வீட்டிற்கு சென்ற வாகன உரிமையாளர் திரும்பி வந்து பார்த்த பொழுது தனது வாகனம் காணாததால் தனது வாகனத்தை அங்கும் இங்கும் தேடி உள்ளார். அருகே உள்ளவர்கள் வாகன உரிமையாளரிடம் நீங்கள் நிறுத்தி சென்ற சிறிது நேரத்தில் தானாகவே வாகனம் தேயிலைத் தோட்டத்தில் நிலை தடுமாறி இறங்கி உள்ளது என தெரிவித்தனர். நிலை தடுமாறி சுமார் 100 அடி வரை வாகனம் விழுந்து உள்ளது. வாகனத்தை நிறுத்தும் பொழுது நியூட்ரலில் நிறுத்திவிட்டு ஹேண்ட் பிரேக் போடாமல் சென்றுள்ளதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.