• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பள்ளபட்டி நடுப்பட்டி, கவுண்டன் பட்டி, ஆகிய ஊர்களில் முத்தாலம்மன் கோவில் வைகாசி திருவிழா..,

ByPuthar Pandian P

Jun 13, 2026

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டி , நடுப்பட்டி ( தெற்குதெரு ) , கவுண்டன் பட்டி ஆகிய ஊர்களில் முத்தாலம்மன் வைகாசி கோவில் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது.

முதல் நாள் கரகாட்டம், அம்மன் அலங்காரம் செய்து நேரத்தில் 3 ஊர்களிலும் முத்தாலம்மன் ஊர்வலமாக எடுத்துச் சென்று அந்த அந்த கோவிலுக்கு அம்மன் சென்றடைகிறது அப்போது மளைப்பாரி ஊர்வலம்,மாவிளக்கு எடுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வழிநெடுகிலும் அபிஷேகம் செய்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். 2-வது நாள் தீசட்டி எடுத்தல், கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல், குழந்தை தொட்டி சுமந்து வருதல் உட்பட பல்வேறு தேர்த்திகடன் செலுத்தினர். இதில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செய்தனர்.

3-வது நாள் பள்ளபட்டி நடுப்பட்டி ஆகிய ஊர் முத்தாலம்மன் பிள்ளையார் கோவில் அருகே ஒன்று சேர்ந்து ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கும் பொதுமக்களும் அருள் பாலித்தனர். அம்மனுடன் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது , மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், ஆண்கள் பெண் வேடம் அணிந்து ஊர்வலம் மற்றும் மாட்டு வண்டியில் ராமர் லட்சுமனன் சீதை ஆஞ்நோயர் வேடம் அணிந்தும் ஊர்வலமாக வந்தனர். ஆடல் பாடல் நாடகம் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. நிறைவாக அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது. இந்த விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.