• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் துணை மேயர் மகன் மீது வழக்குப்பதிவு..,

ByS.Ariyanayagam

Jun 13, 2026

திண்டுக்கல் துணை மேயர் ராஜப்பா மகன் மீது அவரது மனைவி போலீஸ் புகார் அளித்ததால், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் துணை மேயர் மகன் கார்டினல் இமானுவேல். இவரது மனைவி ஜூகிபிரிசில்லா. இவர் தனது கணவர் கார்டினல் இமானுவேல் அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததார்.

இதன் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கார்டினல் இம்மானுவேல் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.