• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிப்.24 துவங்கிய உக்ரைன் ரஷ்ய போர் 100 வது நாளை எட்டியது

ByA.Tamilselvan

Jun 3, 2022

கடந்த பிப்.24 ல் துவங்கிய உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 100வது நாளை எட்டியுள்ளது.
நேட்டோ கூட்டமைப்பில் சேருவதை தடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ், கார்க்கிவ் போன்ற நகரங்களின் பெரும் பகுதியை ரஷ்ய பகுதிகளில் பிடித்துவிட்டன. குறிப்பாக மரியுபோல் நகரை முழுமையாக ரஷ்ய படைகள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டன. ரஷ்ய ராணுவத்தினர் சுமார் 15,000 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக உக்ரைன் கூறி வருகிறது.
பொதுமக்கள் உட்பட பல ஆயிரம் பேரை ரஷ்ய ராணுவம் கொன்று குவித்துள்ளதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக மரியுபோல் நகரில் சில நாட்களுக்கு முன்பு சடலங்களின் குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கிழக்கு டோன்பாஸ் நகரில் சில பகுதிகளை பிடிக்கும் முயற்சியில் ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.தாக்குதல் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், தங்கள் நாட்டின் 20% பகுதிகள் ரஷ்யாவின் வசம் சென்றுவிட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்ய ராணுவத்தின் மீது எதிர்த்தாக்குதல் நடத்த சிறை கைதிகளையும் உக்ரைன் களம் இறங்கியுள்ளது. உக்ரைனின் பெரும்பாலான நகரங்களை ரஷ்ய கபளீகரம் செய்துவிட்டதாக இங்கிலாந்து ராணுவம் கூறியுள்ளது. உக்ரைனுக்கு தொடர்ந்து அமெரிக்கா ராணுவங்களை அனுப்பி வருவதால் இப்போதைக்கு இந்த சண்டை ஓயாது என்றே தெரிகிறது.
இந்தபோர் காரணமாக உலகின் பல நாடுகளில் கோதுமை ,பொட்ரோலிய பொருட்களின் விலை ஏறியுள்ள நிலையில் பல நாடுகள் கடும் பொருளாதார சிக்கலில் சிக்க தவித்து வருகின்றன.போரை முடிவுக்கு கொண்டு வராமல் அமெரிக்க போன்றநாடுகள் அயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பி வருவது மேலும் சிக்கலைஏற்படுத்துகிறது.