• Thu. Oct 10th, 2024

ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டி

ByKalamegam Viswanathan

Jun 4, 2023

அரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் நியமனம் போன்றவற்றை செய்யவில்லை, அதனால்தான் இந்த கோர விபத்து ஏற்பட்டிருக்கிறது என்கிற தார்மீக கருத்தை ஏற்று குறைந்தபட்சம் ரயில்வே துறை அமைச்சராவது பதவி விலக வேண்டும். -தொல்.திருமாவளவன் பேட்டி.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
ஒரிசா ரயில் விபத்தில் 300 பேர் பலியாகி உள்ளார்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள தலைகுணிவு, கவாச் என்கிற கவாச் பாதுகாப்பு நவீன தொழில்நுட்ப கருவியை போதுமான அளவு முறையாக பயன்படுத்தியிருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும் என்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்திய ஆட்சியாளர்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்வதை விட, மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை விட வெறுப்பு அரசியலை விதைப்பதில், இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரான வன்முறைகளை தூண்டுவது, ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம் எழுப்புவதில் கவனம் செலுத்துகின்றனர். அரசு துறைகளை எல்லாம் கார்ப்பரேட் மையமாக வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றனர். ரயில்வே துறையை தனியார் மையம் ஆக்குவது அவர்கள் செயல் திட்டத்தில் ஒன்றாக உள்ளது அதனால் புதிய பணியாளர்கள் நியமனம் என்பதே இல்லை, ரயில்வே துறையில் தேவையான பணியாளர்களை தொழில்நுட்ப வல்லுனர்களை நியமனம் செய்திருந்தால் இப்படி ஒரு கோர விபத்து நடவாமல் தடுத்திருக்க முடியும் என்றும் கருத்துக்கள் எழுகின்றன. மிக முக்கியமான அனைத்து துறைகளையும் தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்கிற கொள்கையை கொண்டிருக்கும் மோடி அரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் நியமனம் போன்றவற்றை செய்யவில்லை, அதனால்தான் இந்த கோர விபத்து ஏற்பட்டிருக்கிறது என்கிற தார்மீக கருத்தை ஏற்று குறைந்தபட்சம் ரயில்வே துறை அமைச்சராவது பதவி விலக வேண்டும். ரயில்வே துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு இந்த விபத்துக்கான காரணங்களை கண்டறியும் விசாரணை முழுமையாக நடத்த முடியாது. இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய உயர்மட்ட அளவிலான புலன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். எனவே அமைச்சர் பதவி விலகி விட்டு முழுமையான காரணங்களை கண்டறிவதற்கான புலன் விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
இந்த கோர விபத்து நடந்த உடன் உடனடியாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டது பாராட்டுதலுக்குரி யது. அந்த நாளை துக்க நாளாக அறிவித்தது மட்டுமில்லாமல் கலைஞரின் நூற்றாண்டு துவக்க நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு இரண்டு அமைச்சர்களை ஒடிசா அனுப்பியதோடு அதிகாரிகள் குழுவையும் அனுப்பி ஒடிசா மாநில அரசோடு இணைந்து மீட்பு பணியில் ஈடுபடும் நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார் என்கிற நிலைப்பாடு பாராட்டுதலுக்குரியது.
இந்தியா ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்துள்ளது இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து ஆணவக் கொலை நடப்பதற்கு காரணமாக இருப்போர்க்கு சம்பட்டி அடியை கொடுத்து இருக்கிறது. கோகுல்ராஜ் கொலை செய்வதற்கு சாதி அமைப்பும் சாதி வெறி திமிரும் தான் காரணம் என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. உயர் நீதிமன்ற நீதி நாயகர்கள் ரமேஷ் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றியையும் உருத்தாக்குகிறோம். நவீன ஆதாரங்களைக் கொண்டு அனைத்து சாட்சிகளும் பிறழ்சாட்சியான பிறகும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குற்றவாளிகளை அடையாளம் காட்டி குற்றத்தை நிரூபித்து நீதியை வென்றெடுத்து இருக்கும் மூத்த வழக்கறிஞர்களுக்கு ஆகியோருக்கு பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சூழலில் தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுகிறது.
மதுரை ஒத்தக்கடை திருமோகூரில் கோவில் திருவிழாவில் சாதி வெறி பிடித்த சிலர் திட்டமிட்ட தலித்துகளின் குடியுரிப்புகளுக்கு புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதில் மூன்று பேர் தலைகாயம் அடைந்து ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரையில் குற்றவாளிகள் யாரும் சிறை படுத்தப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. மதுரை சுற்றுப்பகுதிகளில் கடந்த சில மாதங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாதிய வெறியாட்டங்கள் நடைபெற்றுள்ளது, இந்த சம்பவத்திலும் முறையான நடவடிக்கை இல்லை என்பது தெரிய வருகிறது. பாலியல் தொந்தரவு, தீண்டாமை வன்கொடுமை, கணவன் மனைவி மீது தான தாக்குதல், இளைஞர்கள் மீதான தாக்குதல் என வன்கொடுமைகள் நடைபெற்றுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என தெரிய வருகிறது. எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் ஜூன் 12-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் இது போன்ற வன்முறைகளில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து சிறை படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக துணை முதல்வர் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு:
அந்த மக்களின் உணர்வுகளை புறம் தள்ளிவிட முடியாது அதற்கு ஏற்ப அவர்களுக்கு தேவைக்கு ஏற்ப நம் மக்களுக்காக போராட வேண்டியது நம் கடமை. அவர் அணைகட்ட விரும்புகிறார் என்பதை நாம் குற்றம் சொல்ல முடியாது. அணை கட்டுவதில் பாதிப்பு ஏற்படும் என நாம் உரத்த பேசுவோம் உரிய இடத்தில் இதை கொண்டு சேர்ப்போம் இதற்கென்று அமைக்கப்பட்டு இருக்கும் காவிரி மேலாண்மை ஆணையம் இதற்கு விடை சொல்லி இருக்கிறது. எங்கள் அனுமதி இல்லாமல் யாரும் ஒரு சங்கிலி கூட எடுத்து வைக்க முடியாது என்று சொல்லி இருக்கிறது எனவே முறையிட வேண்டிய இடத்தில் முறையிடுவோம்.
கூகுளில் முத்தரையர் விமான நிலையம் என்று வருவது குறித்த கேள்விக்கு:
இது அரசு பதிவு பண்ணவில்லை யார் வேண்டுமென்றாலும் அப்படி பதிவு செய்யயலாம். சாதி அமைப்புகள் தான் இளைஞர்களை தூண்டி விடுகிறார்கள்.
சட்டஒங்கு சரியில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டும் சூழல் குறித்த கேள்விக்கு:
தலித் மக்கள் மீதான தாக்குதல் எல்லா கட்சிகளிலும் நடைபெறுகிறது. எப்போதெல்லாம் நடைபெறுகிறதோ அப்போது அதை சுட்டிக்காட்டி போராட்டம் நடத்துகிறோம். அரசு வழிகாட்டினாலும் கூட காவல்துறை உள்ளூரில் உள்ள சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து போகிறார்கள். இதை விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறோம். அரசை பொருத்தவரை தலித் மக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *