
மாடுகளை அடித்துக் கொன்ற புலியை கண்காணிக்க வனத்துறை சார்பாக கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது,
கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ள நிலையில் சமீப காலத்தில் வளர்ப்பு பசு மாடுகளை புலி தாக்கி கொண்டு வரும் நிலையில் பொதுமக்கள் புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்து இருந்தனர்,
இந்நிலையில் இன்று கூடலூர் அருகே உள்ள நிலக்கோட்டை நம்பர் ஒன் எஸ்டேட் பகுதியில் ஏ சி எஃப் கருப்பசாமி தலைமையில் கூடலூர் மாவட்ட வன அலுவலர் கொம்முஓம்கார் முன்னிலையில் கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிலக்கோட்டை வனச்சர்கள் சுரேஷ்குமார் மற்றும் வனவர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் அதிவிரைவு படையினர் புலியை கண்காணிக்க 13 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்,

மேலும் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் அதிவிரைவு படையினர் கேமராவின் எதிரே புலி போல் நடந்து சரியாக பதிவாகிறதா என ஒத்திகை பார்த்தனர்.
