திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகர் தெற்கு விஸ்தரிப்பு 7வது தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் வயது (64) இவர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு சொந்தமான மற்றொரு வீடு காட்டூர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ளது. அங்கு வசிப்பதால் இந்த வீட்டில் தினமும் மாலை லைட்டு போட்டுவிட்டு செல்வதும் மறுநாள் காலை வந்து லைட்டை நிறுத்துவதும் வழக்கம்
மேலும் தற்பொழுது அந்த வீட்டை சுற்றி மதில் சுவர் கட்டுவதற்கு உரிய வேலைகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் வீட்டில் லைட்டை போட்டு விட்டு சென்றவர் இன்று காலை லைட்டை நிறுத்துவதற்காகவும் வேலைக்கு ஆள் வருபவர்களை பார்ப்பதற்காகவும் சுமார் 9.30 மணியளவில் வந்து பார்த்த பொழுது வீட்டில் காம்பவுண்ட் கேட் வழியாக உள்ளே சென்ற மர்மநபர்கள் வீட்டின் கேட்டை உடைத்து அறையின் பூட்டை உடைத்து அருகில் இருந்த பீரோ உடைத்து பீரோவில் இருந்து வளையல், மோதிரம் என இரண்டரை பவுன் மற்றும் பணி ஓய்வு பெறும் போது வழங்கப்பட்ட விலை உயர்ந்த இரண்டு வாட்சுகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும் அவரது வீட்டில் திருடிசென்ற மர்ம நபர் தனது உள்ளாடையை கழட்டி வீட்டின் கேட்டில் மாட்டி விட்டு சென்றுள்ளார். இச்சம்பவம் பற்றி ராஜசேகர் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் பார்வையிட்டதோடு உடனடியாக கைரேகை மற்றும் மோப்பநாய் பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

திருவெறும்பூர் ஏ.எஸ்.பி அரவிந்த் பனாவத் தலைமையிலான போலீசார் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருவெறும்பூர் சுற்றுவட்டார பகுதிகள் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளதால் பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர்
இந்நிலையில் திருடன் வீட்டின் கேட்டில் தனது உள்ளாடையை கழட்டி தொங்கவிட்டுச் சென்ற சம்பவம் போலீசாருக்கு சவால் விடும் விதத்தில் உள்ளது போல் தெரிகிறது என பொதுமக்கள் கருதுகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)