சாக்கடையை முதல்வர் சுத்தப்படுத்தி விட்டு சென்று இருக்க வேண்டும் அதை விடுத்து தாமிரபரணி வைகை ஆறு சுத்தப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் அனைத்தையும் அதிகாரிகள் மறைக்கிறார்கள்.
*கர்நாடகாவில் அம்மா அவர்கள் தைரியமாக தமிழ் வாழ்க என்று கூறிவிட்டு வந்தவர் கமல் ஒரு ராஜ சபா சீட்டுக்காக அவர் நிலை மறந்து பேசுகிறார்- *நைனார் நாகேந்திரன் பேட்டி*
கோவை விமான நிலையத்தில் பாஜகவின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
இதுதான் திராவிட மாடல அரசு முதல்வருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிவதில்லை அதிகாரிகள் மறைக்கிறார்கள் முதல்வருக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதிகாரிகள் அதனை மறைத்து விடுகிறார்கள். பிடித்து விட்டு சென்றிருந்தால் நன்றாக இருக்கும் முதல்வர் டெல்லி சென்று தாமிரபரணி வைகை ஆறு சுத்தப்படுத்த வேண்டும் என கேட்கிறார். ஆனால் இவர்களை சாக்கடையை சுத்தப்படுத்திவிட்டு சென்று இருந்தால் நன்றாக இருக்கும்.

குறிப்பாக பாரிசு அரசியல் இருக்கக் கூடாது என்பதுதான் கமலின் முதல் கொள்கையாக இருந்தது. ஆனால் ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்ததும் வாரிசு அரசியல் இருக்கலாம் என்கின்றார். அவரவர்களுக்கு அவர்கள் தாய்மொழி முக்கியம் எந்த மொழி பெரியது என்பதில் கருத்து சொல்ல முடியாது நம்முடைய தாய்மொழி நமக்கு முக்கியம். அதைத்தான் சொல்ல வேண்டுமே தவிர குறிப்பாக கமலவர்கள் கன்னடத்தை பூர்வீகமாக கொண்ட முதல்வரால் பிரச்சனை வந்தது என்று சொன்னார். ஆனால் அந்த முதல்வர் படப்பிடிப்பிற்காக செல்லும்போது கன்னடம் வாழ்க என்று சொல்ல வேண்டுமென அங்கே இருப்பவர்கள் சொன்னார்கள். ஆனால் அம்மா அவர்கள் தைரியமாக தமிழ் வாழ்க என்று சொல்லிவிட்டு வந்தார் எனவே கமல் அவரது நிலையில் இருந்து மாரி ராஜ்யசபா சீட்டுக்காக இன்றைக்கு பேசி வருகிறார்.
அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கிறது. குறிப்பாக நெட்வொர்க் சார்ஜ் என்பது குறைக்கப்பட வேண்டிய ஒன்றுதான் மத்திய அரசின் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் மாநில அரசு எதுவுமே செய்வதில்லை. வீடு கொடுக்கும் திட்டமாக இருந்தாலும் சரி எந்த திட்டமாக இருந்தாலும் சரி மாநில அரசு மத்திய அரசின் திட்டத்தை முழுவதுமாக மறைத்துவிட்டு மக்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யாத அரசாகத்தான் உள்ளது.
இன்றைக்கு ஆளும் கட்சியில் பிரதீஷ் 300 கோடி ரூபாய்க்கு வீடு கட்டிக் கொண்டிருக்கின்றார் என்று சொல்கிறார்கள். ஆகாஷ் 500 கோடி ரூபாய்க்கு வீடு கட்டிக் கொண்டிருக்கின்றார் என்று சொல்கிறார்கள் பம்பாரில் வரும் நடிகைகளுக்கு 35 லட்சம் ரூபாய் கொடுக்கிறார்கள். இன்றைக்கு இந்த அளவிற்கு பணம் திமுகவிடம் உள்ளது என்று விஜய் சொல்வது உண்மைதான். பெட்டி பெட்டியாக பணம் கொடுப்பார்கள் என்று சொல்வது வரக்கூடிய தேர்தலில் தெரியும் யாருக்கு வாக்களித்தால் நன்றாக இருக்குமோ நல்லது நடக்குமோ என்று பாட்டு மக்கள் முடிவு செய்யுங்கள் உங்களுடைய வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வரும் 22 ஆம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். தவறாமல் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சியை பொருத்தவரை அது அவர்களுடைய உட்கட்சி விவகாரம் அது பற்றிய கருத்தை நாம் சொல்ல முடியாது என்றார்.