• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

சண்டை காட்சிக்காக டெல்லி சென்ற தளபதி

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பி வெளியாகவுள்ள டாக்டர் படத்தின் ரீலீஸ்க்காக உள்ளார்.

 

அதுமட்டுமின்றி நெல்சன் தற்போது தளபதி விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கி வருகறார். விஜய்க்கு ஜோடியாக முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டே, முக்கியமான ரோலில் இயக்குனர் செல்வராகவன், மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைகிறார்.

கடந்த இரண்டு மாதங்களாக இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. மேலும், இம்மாத துவக்கத்தில் நான்காம் கட்டப் படப்பிடிப்பை சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட அரங்கில் நடத்தினர் படக்குழுவினர்.இதை முடித்த படக்குழு தற்போது சண்டைக் காட்சிக்காக படக்குழுவினர் டெல்லி சென்றுள்ளனர். அங்கு 5 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் தற்போது சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.