• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அரசுப் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்த மாணவர்களை திட்டி வீடியோ வெளியிட்ட ஆசிரியை கைது..!

Byவிஷா

Nov 4, 2023
சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி சென்ற மாணவர்களை அடித்து இறக்கிவிட்டதோடு பஸ் ஓட்டுநர், நடத்துநர்களை அறிவுகெட்ட நாயே என்று ஒருமையில் திட்ட அதனை வீடியோவாக எடுத்து பிரபலமான பாஜக நிர்வாகியும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் நேற்றைய தினம் மாலையில் மாநகர அரசு பேருந்து ஒன்றில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர், அப்போது அந்த பேருந்தை நிறுத்திய பாஜக பெண் நிர்வாகியும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் படியில் நின்று பயணித்தவர்களை இறக்கிவிட்டு ரகளையில் ஈடுபட்டார். பள்ளி மாணவர்கள் சிலரை தாக்கிதுடன் ‘டேய் நாயே இறங்குடா’ என ஒருமையில் திட்டினார்.
மேலும் அரசுப்பேருந்தை இயக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களையும் அவர் ஒருமையில் திட்டினார். அவர் இப்படி செய்வதை வீடியோவாக எடுத்து அது சமூகவலைத்தளங்களிலும் வைரல் ஆனது. மாணவர்களை தாக்கியும், பேருந்து நடத்துநரை நாய் என்று திட்டியும் சட்டத்தை கையில் எடுத்த ரஞ்சனா நாச்சியாரை கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலை ரஞ்சனா நாச்சியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

https://x.com/AalenOff/status/1720417380206080366?s=20