• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 17-ஆம் தேதி கூடுகிறது.

Byகாயத்ரி

Oct 7, 2022
TN Government

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது என அறிவித்தார். துணை நிதிநிலை அறிக்கை இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் பேரவையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளுக்கான இருக்ககைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டமன்ற மரபுப்படி ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பேரவையில் அமர வைக்கப்படுவர். சட்டப்பேரவை கூடும்போது அதிமுக விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதிமுக கொறடா அளித்த கடிதம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதங்கள் தொடர்பாக இரு தரப்பிடமும் விளக்கம் கேட்பது ஆய்வில் உள்ளது. இருக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை கூடும்போது தெரியவரும். பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தவர்கள், கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என கூறினார். மேலும், வரும் 17-ஆம் தேதி அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். இதன் பின்னர் எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.