• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆன்லைன் மீடியாக்களுக்கு தமிழ்நாடு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும்!

தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்டு யூனியன், இந்தியன் ஜர்னலிஸ்டு யூனியன், இண்டர்நேஷனல் ஜர்னலிஸ்டு பெடரேஷன் இணைந்து நடத்திய பத்திரிகையாளர் பாதுகாப்பு கருத்தரங்கம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நேற்று நடைபெற்றது.

மாநில தலைவர் சிவக்குமார் பொதுச்செயலாளர்
ஜி.கதிர்வேல், ஆகியோர் தலைமை வகிக்க, பொருளாளர்
பி.நிலவேந்தன், துணைத்தலைவர் மீடியராமு இணைசெயலாளர்
ஆர்.ரங்கபாஷியம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த கருத்தங்கில் சிறப்பு அழைப்பாளர் களாக பங்கேற்ற
கர்நாடக மாநில பத்திரிகையாளர் சங்க தலைவர் ஆர். நீலகண்டா, தமிழ்நாடு விஜிலென்ஸ் டிஜிபி பி.கே.ரவி ஐ.பி.எஸ்., சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் ஆர். சி. பால் கனகராஜ்,, உலக அமைதி நட்புறவு இயக்க தலைவர் கே.ஆர்.கே உள்ளிட்ட பலரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு :

  1. பத்திரிகையாளர் நலவாரியம் அமைத்து அரசாணை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கும், செய்தி துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

2.பத்திரிகையாளர் நல வாரியத்தின் பணிகளை சினிமா நலவாரியத்துடன் இணைத்து பணி செய்யும் வகையிலான அறிவிப்பினை மறு பரிசீலனை செய்து , பத்திரிகையாளர் நல வாரியத்துக்கு தனியான அலுவலகமும், அலுவலகங்களையும் நியமித்து செயல்படுத்த வேண்டும்.

3.தாலுகா வாரியாக பணியாற்றும் நிருபர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.

4.மாவட்டம், தாலுகா வாரியாகப் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே வீட்டுமனை பட்டா, இலவச வீடு உள்ளிட்ட நலதிட்டங்கள் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்,

5.ஆன்லைன் மீடியாக்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது போல தமிழ்நாடு அரசும் அங்கீகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.