• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பணிபுரியும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்துதர தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

Byவிஷா

Jul 6, 2023

பணிபுரியும் இடங்களில் பணியாளர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி அன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அங்கு பணி புரியும் தொழிலாளர்களின் நலத்தை கருத்தில் கொண்டு குடிநீர், கழிவறை, முதலுதவி வசதிகள் தொடர்புடைய வரைமுறைகள் தொடர்பான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தற்போது இந்த மசோதா தற்போது சட்டமாகி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கடைகள், நிறுவனங்கள் திருத்தச் சட்டத்தின்படி பணிபுரியும் இடத்தில் குடிநீர், கழிவறை வசதிகள் அவசியம், போதிய காற்றோட்டத்துடன் கூடிய ஓய்வறை சாய்வு நாற்காலிகள், முதலுதவி பெட்டிகள் இடம் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.