

சென்னை அண்ணாசாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, புதிய மேம்பாலம் அமைக்க, ரூபாய் 621 கோடி உதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே உயர் மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. சென்னை அண்ணாசாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக தமிழக அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தை நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிலையில் தற்போது சென்னை அண்ணா சாலையில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கு 621 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
