தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது .. 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் எனவும்
1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு பிறகு ஆலோசனை செய்வதாக அறிவித்துள்ளது. கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி, நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி.
வரும் 23ம் தேதி முதல் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் செயல்படலாம் மற்றும் கடற்கரை பகுதியில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்
இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது . தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை திறக்க அனுமதித்து. 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அறிவித்துள்ளது.