• Wed. Apr 24th, 2024

திமுகவுக்கு ஒன்னுனா சிறுத்தைகள் களத்தில் இறங்கி நிப்போம்.. சீறும் திருமா!…

By

Aug 21, 2021

இந்தியாவிற்கு வழிகாட்ட கூடிய வகையில் திமுக அரசால் புரட்சிகரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆவதை எதிர்ப்பவர்களை கண்டித்து, சமூக நீதிக்கான களத்தில் திமுக அரசின் செயல்பாடுகளுக்கு விசிக துணை நிற்கும் என திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை எதிர்ப்பதாகவும்
நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு வலுவான எதிர்க்கட்சியை உருவாக்க வேண்டியது அவசியம் எனவும் அதற்கு நேற்று நடந்த சோனியா தலைமையிலான கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.

விசிக சார்பில் ஆக.17- முதல் செப்டம்பர் 17 வரை சமூக நீதி சமூகங்களுக்கான ஒற்றுமை குறித்த விழிப்புணர்வு இயக்கம் நடைபெறும் மற்றும் சமூகநீதி சமூகங்களை பிரிக்கும் வகையில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது என திருமா குற்றச்சாட்டினார்.

20 சாதிகள் இடம் பெறவில்லை விடுபட்டு சாதிகளை இணைக்கக்கோரி மனு அளித்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது என்பதை விசிக வரவேற்கிறது, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மக்கள் தொகை அடிப்படையில் அனைவருக்கும் இட ஒதுக்கீடு என்ற சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும்
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது ஒரு சவாலாக இருக்கிறது தெரிவித்தார் .

ராமதாஸ் நேரத்திற்கு ஒன்றை பேசுகிறார், அவர் பேசுகிற கருத்துக்கு அவரே உடன்படுவாரா? உறுதியாக நிற்பாரா என்பது தெரியாது எனவும் ஒப்பந்தகாரர்கள் முறைகேடு செய்து கட்டிடங்களை கட்டுகிறார்கள், ஏழைமக்கள் குடி இருக்கிறார்கள் என்பதனால் இதுபோன்ற கட்டடங்களை கட்டுகிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்பது குறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு சுட்டிக்காட்டப்பட்டு அதனை ரத்து செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம்தான் முறையானது இதனை நடைமுறைப்படுத்த அரசுக்கு உரிய அழுத்தம் தருவோம் என்றார்..

150 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று அண்ணாமலை கூறுவது தொண்டர்களை உற்சாகப்படுத்த மட்டுமே. பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலைப்பாட்டை அரசு கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

கோடநாடு வழக்கில் ஓபிஎஸ் இபிஎஸ்க்கு எந்த தொடர்பும் இல்லை என்றால் அச்சப்படத் தேவையில்லை இருப்பினும் ஏன் பதட்டபடவேண்டும் என்பது விளங்கவில்லை. இபிஎஸ், ஓபிஎஸ் கடமை.

சாதிக் பாஷா கொலை வழக்கில் மறுவிசாரணை குறித்து தேவையிருந்தால் அரசு அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *