• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர்..,

ByM.I.MOHAMMED FAROOK

May 3, 2025

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காவல்துறை சார்ந்த மக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை ஒரு வார காலத்திற்குள் சரி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி செளஜென்யா உத்தரன் பேரில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று காவல்துறை மக்கள் மன்றம் நடைபெற்று மக்களின் பொது பிரச்சினைகள், தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று காரைக்கால் போக்குவரத்து காவல் நிலையத்தில் நடைபெற்ற போக்குவரத்து காவல் மற்றும் சைபர் கிரைம் சார்ந்த மக்கள் மன்றம் நடைபெற்றது. இதில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி செளஜென்யா, காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் அவர்களின் கலந்து கொண்டு மக்களின் பிரச்சனைகளை கேட்டுறிந்தனர். 

இந்த மக்கள் மன்றத்தில் போக்குவரத்து சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறித்து மக்கள் முதல்நிலை காவல் கண்காணிப்பிடம் புகார் அளித்தனர். காரைக்காலில் தொலைந்து போன 38க்கும் மேற்பட்ட செல்போன்கள் சைபர் கிரைம் செல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.