• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வெற்றி பெற்ற பரிசு தொகையினை தங்களது பள்ளிக்கு வழங்கிய மாணவிகள்

ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் பரிசு பெற்ற பணத்தில் பள்ளிக்கு பாய்விரிப்புகள் வாங்கி தந்து அசத்திய மஞ்சூர் மகளிர் பள்ளி மாணவிகள்….
மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஜனவரி மாதம் 25 ம் தேதி வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றி ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவிகளின் ஓவியங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் எமது பள்ளியை சேர்ந்த மாணவிகளின் படைப்புகளுக்கு முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகளுக்கான தொகையினை மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
வாக்காளர் தினம் ஓவியப் போட்டிகளில் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவிகள். முதலிடம். எஸ்.ஐஸ்வர்யா -10 A,இரண்டாமிடம்: கே.அக்சிதாமாதி 9-A, மூன்றாமிடம்: மு.தீபிகா 10-A ஆகிய மாணவிகள் ஒன்று சேர்ந்து பள்ளியில் செயல்படும் HI-TEC கம்யூட்டர் லேபிர்க்கு மாணவிகள் அமர்வதற்கு ஓவியப்போட்டியில் பரிசு பெற்ற பணத்தில் பாய்விரிப்புகள் வாங்கி தந்து அசத்தினர். சிரிய தொகையானாலும் பயின்ற பள்ளிக்கு ஏதாவது செய்யனும் என்ற பெரிய மனசு அந்த மூன்று மாணவிகளுக்கும் இருப்பதையொட்டி பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் ரவிக்குமார் மற்றும் ஓவிய ஆசிரியர்கள் சகாயதாஸ், ராஜ்மோகன் சக ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டி ஊர்சாகப் ப்படுத்தினர்.