• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

முதல்வர் பங்கேற்க்காத மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்- காரணம் என்ன?

ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மற்றும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் இன்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சிலரும் கலந்துகொள்ளவில்லை.

ஆனால் உதயநிதி எம்.எல்.ஏ., கனிமொழி எம்.பி. உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் மற்றும் மூத்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

2006-2011 ஆட்சி காலத்தில் மத்திய அரசுக்கு எதிராக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முதல்வராக கருணாநிதி கலந்து கொண்டார். அப்போது வழக்கு ஒன்றில், மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் மாநில அரசுகள் கலந்து கொள்ளக்கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவு அன்றைக்கு மேடையில் இருந்த கருணாநிதியிடம் சொல்லப்பட்டதும் ஆர்ப்பாட்ட களத்தில் இருந்து அவர் உடனடியாக கிளம்பிச் சென்றார்.

இதனால்தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.