• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

பாஜகவுக்கு இதே வேலையா போச்சு- வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Nov 30, 2022

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பாஜவுக்கு இதே வேலையா போச்சு என கிண்டலடித்துள்ளார்.
ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரும் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் மொத்தம் 1,621 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி காணப்படுகிறது.


குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அங்கே கூட்டத்தில் காளை புகுந்து காங்கிரஸ் தொண்டர்களை தொந்தரவு செய்தது. இதனால் ஆத்திரமடைந்த அசோக் கெலாட் “பாஜகவுக்கு இதே வேலையா போச்சு காங்கிரஸ் எங்கே கூட்டம் போட்டலாம் இப்படித்தான் செய்வார்கள்” என்றார். கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.