• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முதல்வருக்கு பரிசளித்த ரோஜா

ஆந்திர எம்எல்ஏவும், பிரபல நடிகையுமான ரோஜா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துப் பேசிய நிலையில், நெசவாளர்கள் உற்பத்தி செய்த அந்த பட்டு சால்வையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பரிசளித்தார்.

ஆந்திர எம்எல்ஏவும், பிரபல நடிகையுமான ரோஜா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
தமிழகம் மற்றும் ஆந்திரா இடையேயுள்ள ஒரு சில பிரச்சினைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சொன்னேன். அந்த பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த சந்திப்பின்போது நெசவு செய்யப்பட்ட துணியில் முதல்வர் ஸ்டாலின் உருவம் பொறிக்கப்பட்ட எடுத்துக் காட்டி விளக்கினார். மேலும், நெசவாளர்கள் உற்பத்தி செய்த அந்த பட்டு சால்வையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பரிசளித்தார்.