உசிலம்பட்டி அருகே அரசு துவக்கப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால், தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் நிலை உருவாகியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எரவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு துவக்கப்பள்ளியில் சுமார் 17 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை நேற்று இரவு பெய்த கனமழையால் இடிந்து விழுந்தது, மாணவ மாணவிகள் இருக்கும் போது இடிந்து விழாத சூழலில் பெரும் விபத்து ஏதும் ஏற்படவில்லை.
இந்நிலையில் பள்ளி கட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்த முடியாத நிலை உருவானதை அறிந்த கிராம மக்கள் கிராமத்தில் உள்ள தனிநபருக்கு சொந்தமான கட்டிடத்தில் தற்காலிகமாக மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இது குறித்து அறிந்த உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், நேரில் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் பள்ளியை சீரமைக்கவும், புதிய கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.