• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

கழிவுநீர் தேங்கி இருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்..,

ByKalamegam Viswanathan

Feb 7, 2026

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் உள்ள வடக்கு தெருவில் ஊராட்சி மன்றம் அருகில் கழிவுநீரை பல நாட்களாக வெளியேற்றாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருப்பதால் ஊராட்சி மன்றஅலுவலகம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் இது குறித்து புகார் அளித்தும் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது தற்போது கழிவுநீர் தேங்கி தெருக்களில் ஆறாக ஓடுகிறது மேலும் அருகிலேயே குடிநீர் குழாய் இருப்பதால் குடிநீரிலும் கழிவு நீர் கலக்கும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர். இதனால் ஊராட்சியில் குடிநீரை பயன்படுத்தும் பொது மக்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதுடன் மிகப்பெரிய அளவில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகையால் அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அழகாபுரி ஊராட்சி செயலாளர் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் புதுப்பட்டி கிராமத்தில் வடக்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள கழிவு நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அலங்காநல்லூர் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் இதே போன்று கழிவுநீர் பல இடங்களில் தேங்கி கிடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாவட்டம் நிர்வாகம் அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு கழிவுநீர் மற்றும் குப்பைகள் தேங்காதவாறு ஊராட்சிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.