

மேலும் காவல்துறையினரின் வாகனத்தை முற்றுகையிட்டு “வேண்டும்,வேண்டும் வீடு வேண்டும்” என்று தரையில் அமர்ந்து கோசங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில், துாய்மை பணியாளர்களுக்காக இரு இடங்களில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, 6 மாதங்களாகி விட்டது. தி.மு.க.,நிர்வாகிகளின் குறுக்கீட்டால், பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்க முடியாமல், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினர் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கோவை, உக்கடம் சி.எம்.சி., காலனியில், 520, வெரைட்டி ஹால் ரோட்டில், 432 துாய்மை பணியாளர்கள் குடும்பத் துடன் வசித்தனர். புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தருவதாக கூறி, அவர்களது வீடுகளை காலி செய்ய வைத்து, இடித்து தரைமட்டமாக்கி விட்டு, தற்காலிகமாக தகர கொட்டகையில் தங்க வைக்கப் பட்டனர்.


முதல்கட்டமாக, உக்கடத்தில், 222 வீடுகள், வெரைட்டி ஹால் ரோட்
டில், 192 வீடுகள் மட்டும் கட்டப்பட்டன. இவற்றை, கடந்தாண்டு அக்., 31ல் ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால் 6 மாதங்களாகியும் இன்னும் பயனாளிகளுக்கு வழங்கவில்லை.
தற்காலிக தகர கொட்டகையில் வசிப்போர் சார்பில், பொறுப்பு அமைச் சர் செந்தில்பாலாஜியை சந்தித்து, முறையிட்டனர் தமிழக முதல்வரால் 6 மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு. உக்கடம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு.
இதுதொடர்பாக நடவ டிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். கோட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இக்கூட்டம்நடத்த ஆளுங்கட்சி நிர்வாகிகள் முட்டுக்கட்டை போட்டனர். அதனால், கூட்டம் நடத்தவில்லை. மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் தி.மு.க.,வை சேர்ந்த துாய்மை பணியாளர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு வீடு ஒதுக்கிய பின் எஞ்சிய வற்றை மற்றவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என கூறி, அரசு, அரசு அதிகாரிகளுக்கு தி.மு.க? நிர்வாகிகள் அழுத்தம் கொடுக்கின்றனர். அதனால், 6 மாதங்களாகியும் இன்னும் பயனாளிகளுக்கு ஒதுக்காமல் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நிறுத்தி வைத்திருக்கிறது.
இந்த நிலையில் இன்று தகர கொட்டகையில் வசிக்கும் துாய்மை பணியாளர்கள் கோவை உக்கடம் சி.எம் சி.காலணியில் உள்ள அடுக்குமாடு குடியிருப்பு கட்டிடத்திற்கு வந்தவர்கள் ஸ்டாலுந்தான் வராரு வீடு திறக்க போறாரு என்று கேலி செய்து பாட்டுபாடியவாரு ஆளுக்கு ஒரு வீட்டை திறந்து உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்து அங்குவந்த உக்கடம் போலிசார் வீடுகளுக்குள்ளிருந்து பொதுமக்களை வெளியேற்றி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையே அந்த மக்கள் பேச்சுவார்த்தைக்கு வந்த காவல்துறையின் வாகனத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து “வேண்டும் வேண்டும் வீடு வேண்டும் என்று கோசங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பேசிய பொதுமக்கள் இதுவரை வீடு பெறாத குடும்பத்துக்கு முதலில் ஒதுக்க வேண்டும். ஏற்கனவே வீடு ஒதுக்கீடு பெற்ற குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு இரண்டாம் கட்டமாக வழங்க வேண்டும். வீடு ஒதுக்கீடு பெற்ற குடும்பத்தில், 63 பேரின் பழைய வீடுகள் இன்னும் இடிக்கப்படவில்லை. ஆனால், அவர்களுக்கு புதிய குடியிருப்புகளில் வீடு ஒதுக்குவதற்கு ஆளுங்கட்சியினர் அழுத்தம் கொடுக்கின்றனர். பழைய வீடு இடிக்கப்பட வில்லை; ஏற்கனவே ஒரு வீடு வாங்கி விட்டனர். மீண்டும் இன்னொரு வீடு வாங்க முயற்சிக்கின்றனர். இதுவரை வீடு வாங்காமல் தகர கொட்டகையில் வசிக்கும் துாய்மை பணியாளர்களின் குடும்பத்தை யோசிக்காமல் இருக்கின்றனர்’ என்று ஆதங்கப்பட்டனர்.

