• Fri. Apr 19th, 2024

தமிழுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் புதுச்சேரி அரசு எப்போதும் ஏற்றுக்கொள்ளாது- ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

Byகாயத்ரி

May 13, 2022

தமிழுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் அதனை புதுச்சேரி அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கம்பன் விழா நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் “உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் மேடை ஏற ஏற உச்சத்தை பெறுவார். தற்போது உள்ள காலகட்டத்தில் திரைப்படங்கள் வெளியான போது கூட மூன்று நாட்கள் அரங்குகள் நிறைவதில்லை. ஆனால் புதுச்சேரியில் கம்பன் விழாவில் மூன்று நாட்களும் அரங்கம் நிறைந்து வழிகின்றது.

கம்பன் வடமொழியையும் படித்து கம்பராமாயணத்தை எழுதினார் . தமிழ் மொழிதான் உயிர் அதை முழுமையாக படிக்காமல் பிற மொழியை திட்டுவது தவறு. பிற மொழி கற்பது தவறு இல்லை. தமிழ்நாடு விளையாடும் மாநிலமாக புதுச்சேரி விளங்குகிறது. ஜிப்மரில் தமிழ் இல்லை என்று கூறி சிலர் அரசியலாக்கி தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நோயாளிகளுக்கு தொடர்ந்து தொந்தரவு ஏற்படுகின்றது. தமிழுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் அதனை புதுச்சேரி அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது . தமிழை உயிராக காக்கும் நாம் பிற மொழிகளை நிந்திக்கக் கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *