• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கள்ளர் சீரமைப்பின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்

ByP.Thangapandi

Jul 12, 2024

கள்ளர் சீரமைப்பின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் – பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை பார்வட் ப்ளாக் கட்சியினர் வாசலிலேயே திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளர் சீரமைப்புத்துறை மற்றும் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளியுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிராக இன்று தென் மாவட்டங்களில் உள்ள 250க்கும் மேற்பட்ட அரசு கள்ளர் பள்ளிகளில் மாணவ மாணவிகள் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என அனைத்து பார்வட் ப்ளாக் அமைப்பினர்களும் இணைந்து அறிவித்திருந்தனர்.

இந்த சூழலில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் இன்று வழக்கம் போல மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்களை போராட்டம் என்ற பெயரில் பார்வட் ப்ளாக் கட்சியினர் தடுத்து நிறுத்தி வாசலிலேயே திருப்பி அனுப்பிய சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் அருகில் இருந்தும், மாணவ மாணவிகளின் கல்வியை பாதிக்கும் வகையில் நடந்து கொண்ட பார்வட் ப்ளாக் கட்சியினரை கண்டு கொள்ளாமல் இருந்ததுடன் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு அளித்து பள்ளிக்குள் அனுப்பி வைக்கப்படாத அவல நிலை ஏற்பட்டு மாணவ, மாணவிகள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.